Wednesday, April 15, 2009

ஷேக்ஸ்பியர் ஒரு பெண் புதுத் தகவலால் பரபரப்பு !
May 31, 2008

புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. அவர் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

உலகப் புகழ் பெற்ற கவிஞர்களில் ஒருவர் ஷேக்ஸ்பியர். அவரது பல படைப்புகள் இன்றளவும் புகழ் பெற்றவை. ஹேம்லட் ஜூலியஸ் சீசர்இ கிங் லியர்இ மெகபத் ஆண்டனி அன்ட் கிளியோபாட்ரா ஓதெல்லோ ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல புகழ் பெற்ற நாடகங்களையும் சொன்னட்ஸ் வீனஸ் அன்ட் அடோனிஸ் தி ரேப் ஆஃப் லுக்ரீஸ் தி பீனிக்ஸ் அன்ட் தி டர்ட்டிள் உள்ளிட்ட பல கவிதைகளையும் வடித்தவர் ஷேக்ஸ்பியர்.

உலகெங்கும் ஷேக்ஸ்பியருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் விரவிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் ஷேக்ஸ்பியர் குறித்த பரபரப்புத் தகவலை ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர் வெளியிட்டுள்ளார்.

இவரது கூற்றுப்படி ஷேக்ஸ்பியர் உண்மையில் ஒரு பெண். யூத இனத்தைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியரின் உண்மையான பெயர் அமெலியா பஸனோ லேனியர் பஸனோ என்பதாகும். அமெலியா 1611ம் ஆண்டு முதன் முதலில் எழுதிய கவிதை சால்வே டியூஸ் ரெஸ் ஜூடாரியம் என்பதாகும். ஒரு பெண்ணால் எழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்ட உலகின் முதல் கவிதை இதுதான்.

அமெலியா இங்கிலாந்தில் வாழ்ந்தவர். இவரது படைப்புகளும் ஷேக்ஸ்பியரின் படைப்புகளும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் அமெலியா தனது படைப்புகளில் பயன்படுத்திய வார்த்தைகளும் கவிதை ஆக்கங்களும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளுடன் மிகவும் பொருந்தி வருகின்றன.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளையும் அமெலியாவின் படைப்புகளையும் பார்க்கும்போதும் அவர்களது ஸ்டைல் உள்ளிட்டவற்றை பார்க்கும்போதும் ஷேக்ஸ்பியரின் படைப்புகள் உண்மையில் அமெலியாவுடையது என்று கருத வேண்டியுள்ளது.

இது மிகப் பெரிய உண்மை. அமெலியாவின் படைப்புகளை ஷேக்ஸ்பியர் திருடவில்லை. மாறாக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் எழுதியவர் அமெலியாதான். அமெலியா வாழ்ந்த காலத்தில் பெண்கள் கவிதை உள்ளிட்டவற்றை படைக்க வெளியிட அனுமதி கிடையாது. இதனால்தான் தனது படைப்புகள் வெளியுலகை எட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா கவிதைகளை வெளியிட்டுள்ளார்.

அக்காலத்து இங்கிலாந்தில் பெண்கள் இலக்கிய உலகில் நுழையக் கூட அனுமதி கிடையாது. நாடகங்கள் மட்டுமல்ல கவிதை கதை என எதையும் எழுத அவர்களுக்கு அனுமதி கிடையாது. இதனால்தான் ஷேக்ஸ்பியர் என்ற பெயரில் அமெலியா தனது படைப்புகளை வடித்துள்ளார்.

அமெலியாவின் திட்டம் என்னவென்றால் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற பெயரிலேயே தனது படைப்புகள் உலகை வலம் வரட்டும். காலத்தின் கோலமாக உண்மை வெளியே வரும்போது தன்னைப் பற்றி உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்பதுதான் என்கிறார் ஹட்சன்.

ஹட்சன் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து ஏராளமான பட்டங்களைப் பெற்றவர் ஆவார். ஷேக்ஸ்பியர் படைப்புகள் குறித்து விரிவான பல ஆய்வுகளை மேற்கொண்டவர். ஹட்சனின் இந்தக் கூற்று இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்…
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே…
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்…
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
“அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்…
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி…”

நன்றி: ‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’, தாமரை
தோழி
சந்தைக்குப் போனால்
எனக்காகக்
கொஞ்சம்
தூக்கம்
வாங்கிவா

கனவுகள் ஒன்றிரண்டு
கலந்திருந்தால்
வரும்
வழியிலேயே
பொறுக்கிப் போட்டுவிடு

*****************

சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே

வா

அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே
நிகழ்காலத்தில் சிந்தனை என்பதே கிடையாது. இதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? இப்போது, இந்தக் கணத்தில் சிந்தனை எப்படி இருக்க முடியும்? நிகழ்கணத்தில் அது இருக்காது. எதிர் காலத்திலோ, இறந்த காலத்திலோதான் அது இருக்க முடியும்.
இறந்த காலம் பற்றி நினைத்தவுடனே, கற்பனை வந்து விடுகிறது, எதிர்காலம் பற்றி நினைத்தவுடனே, தர்க்கம் தோன்றிவிடுகிறது. நிகழ்காலம் பற்றி நீங்கள் எப்படி நினைக்க முடியும்?
நிகழ்காலத்தில் வாழலாம். அவ்வளவுதான்.
இந்தக் கனப்பொழுது மிக நுட்பமானது. மிகச் சிறியது; அணுவைப் போல வேறு எதுவும் அதற்குள் நுழைய இடமே [...]

Monday, April 13, 2009

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு

மகிழ்ச்சி

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!